Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி!
 
பக்தி கதைகள்
உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி!

அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் இல்லத்துக்கு ஒரு முனிவர் வந்தார். அப்போது அபிமன்யு வீட்டில் இல்லை. அவனது மனைவி உத்தரையை சந்தித்து ஆசி வழங்கிய  அவர், அவளுக்கு ஒரு வித்தியாசமான கண்ணாடியைப் பரிசாக அளித்தார்.

அந்தக் கண்ணாடியில் பார்ப்பவர் முகம் தெரியாது. யார் நமக்குப் பிரியமானவரோ
அவரது முகம் தெரியும். உத்தரை கண்ணாடியை உற்றுப் பார்த்தாள். அவளது இதய த்தில் வீற்றிருக்கும் அவளது கணவன் அபிமன்யு தெரிந்தான். சற்று நேரத்தில் வீட்டுக்கு  வந்த அபிமன்யு அந்தக் கண்ணாடியைப் பற்றிய விவரமறிந்து வியந்தான். அதை அவன்  பார்த்தபோது, அவனது அன்பு மனைவி உத்தரை தெரிந்தாள். இருவரும் மனமொத்த  தம்பதியராக இருப்பது கண்டு மகிழ்ச்சியில் மிதந்தனர்.

இந்நேரத்தில் அபிமன்யுவின் தாய்மாமன் கண்ணன் அங்கு வந்தார். ""கண்ணாடியைப்  பார்த்து கணவனும், மனைவியும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே, என்ன  விஷயம்?” என்று கேட்டார்.

""மாமா, இந்தக் கண்ணாடியைப் பாருங்கள். இதில் நீங்கள் தெரிய மாட்டீர்கள்.
உங்களுக்குப் பிரியமானவரே தெரிவார். உங்கள் மனதைக் கவர்ந்தது எனது அத்தை ருக்மிணியா, பாமாவா, மற்ற அத்தைகளா என்று பார்க்கிறேன்” என வேடிக்கையாகச்  சொன்னான் அபிமன்யு.

யாராவது ஒரு மனைவியை அடையாளம் காட்டி இன்னொருத்தியிடம்  மாட்டிக்கொள்வானா அந்த மாயவன்? அவன் கண்ணாடியைப் பார்த்தான். அதில் சகுனி தெரிந்தான்.

""இதென்ன விந்தை?” என அபிமன்யு ஆச்சர்யப்பட்டுக் கேட்டான்.

""அபிமன்யு, என்னை வணங்குபவர்கள் கூட காரியம் ஆக வேண்டுமென்றால்தான் என்னை நினைப்பார்கள். ஆனால், சகுனி தூக்கத்தில் கூட என்னைக் கொன்றே தீர
வேண்டுமென துடிக்கிறான். எப்போது அவனுக்கு என் நினைவு. அதனால் எனக்கும் அவன் நினைவு” என்று வேடிக்கையாகச் சொல்லி சிரித்தார் கிருஷ்ண பரமாத்மா!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.