Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » காவல் தெய்வங்கள்
 
பக்தி கதைகள்
காவல் தெய்வங்கள்

 கடல் கடந்து இலங்கையில் சீதையின் இருப்பிடம் அறிந்து அனுமன் வந்து விட்டான். விபீஷணன் தன் நான்கு நண்பர்களுடன் தனக்கு வரமாகக் கிடைத்த மாய சக்தியால் ஆகாய மார்க்கமாக வந்து விட்டான். ஆனால் வானர சேனைகள், லட்சுமணன், சுக்ரீவன், அவனது தளபதிகள், தானும் எப்படி கடலைக் கடப்பது? யாருக்கும் அனுமனைப் போன்ற ஆற்றலோ, விபீஷணனைப் போன்ற மாய சக்தியோ இல்லையே! தன் சுயமுயற்சியால் தான் கடலைக் கடக்க வேண்டும் எனத் தீர்மானித்தான் ராமன்.

கடல் அரசனை அழைத்து, கடக்க ஏதுவாக இரண்டாகப் பிளந்து பாதை காட்டும்படி கேட்டுக்கொண்டான் ராமன். ஆனால் கடல் அரசனோ, ‘‘அவ்வாறு செய்தால் கடல் வாழ் உயிரினங்கள் துன்புறும் என்றும், அதற்கு மாற்றாக கடலின் மேற்பரப்பில் பாதை அமைத்து கடக்கலாம். வானரப் படையில் நளன் என்றொரு வீரன் ஒருவன் இருக்கிறான்.  கட்டிடக்கலை நிபுணரான விஸ்வகர்மாவின் மகனான அவனிடம் பணியை ஒப்படையுங்கள். வானரங்களால் நிரப்பப்படும் கற்கள் நீரின் மீது மிதக்கும். நிலத்தின் மீதுள்ள சாலை போல நிலைத்து நிற்கும்’’ என யோசனை தெரிவித்தான்.  
 நளனிடம் பொறுப்பை  ராமன் ஒப்படைத்தான். நளனின் உத்தரவுப்படி வானரங்கள் பெரிய பாறைகள், மரங்கள், உறுதியான கொடிகள் என பொருட்களை  கடற்கரையை மறைப்பது போல குவிந்தன.
ஒவ்வொரு பாறையிலும் ‘ராம்’ என எழுதி கடலில் எறிய, ராமர் அருளாலும், கடல் அரசனின் வாக்குறுதியாலும் அவைகள் மிதந்தன.  இரவு, பகல், உணவு, உறக்கத்தை பொருட்படுத்தாமல் பணிகளை வேகமாக நிறைவேறின.
கடற்கரை பகுதியில் அணில்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வந்தன. அவை வானரப்படையைக் கண்டு  பயந்தாலும், நேரம் ஆக ஆக  புனித நோக்கத்தை முன்னிட்டே அவர்கள் பணியாற்றுவது புரிந்தது. அணில் கூட்டத்தின் தலைவன், ராவணனிடமிருந்து சீதையை மீட்க நம்மால் முடிந்ததை செய்வோம் என சூளுரைத்தது. மற்ற அணில்களும்  புனிதப் பணியில் ஈடுபட விரும்பின.   தலைமை அணிலுக்கு சட்டென யோசனை தோன்றியது.  பாலத்திற்காக இடப்படும் பாறைகளை இணைக்கும் வகையில் மணலை நிரப்பலாம் என்றது. அணில் கூட்டத்தில் பெரிய வரவேற்பு! உடனே அணில்கள் கடற்கரையில் புரண்டு உடலெங்கும் துகள்களை ஒட்ட வைத்தன. பிறகு வானரங்கள் அமைத்த பாதை வழியே சென்று உடலை சிலிர்த்து உதிர்த்தன. இதைக் கண்ட  ராமன், ‘சீதையை மீட்பதற்கு எப்படி எல்லாம் உதவிகள் வருகின்றன!’ என நெகிழ்ந்தான்.

 தன் அன்பைக் காட்ட விரும்பிய ராமன் அணில்களின் முதுகில் அன்புடன் தடவினான். அந்த அன்பு என்றும் மாறாது என்பதை உறுதி செய்வது போல ராமனின் கை பட்ட இடத்தில் மூன்று வெள்ளைக் கோடுகள் படர்ந்தன. அதையறிந்த அணில்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
வானரங்கள் களைப்படையாமல், இருள் வந்த பின்னும் கடைமையிலிருந்து பின்வாங்கவில்லை. இதைக் கண்ட ராமன் மனம் விம்மியது. ‘இவற்றின் அன்புக்கு என்ன கைம்மாறு செய்வேன்?!’ என மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.
இந்த வகையில் நள்ளிரவில் பணியாற்றிய சில வானரங்கள், வில்லுடன்  இரு வீரர்கள் அங்கும் இங்குமாக நடப்பதைக் கண்டு, ‘‘அவர்கள் ராமரும், லட்சுமணரும் தானே!’ என்றது ஒரு வானரம்.
‘‘ இவர்கள் காவல் புரிகிறார்களா அல்லது கண்காணிக்கிறார்களா?’’ என இன்னொரு வானரம் ஐயத்துடன் கேட்டது.
‘‘ நாம் சரியாகப் பணியைச் செய்கிறோமா எனக் கவனிக்கிறார்கள்’’  என்றது மற்றொரு வானரம்.
‘‘பலன் கருதாமல் பாடுபடும் நம் நோக்கமே சீதையை மீட்க வேண்டும் என்பது தானே! இதை உணராமல் நம் வேலையை கண்காணிப்பது சரியாகப் படவில்லை’’ என்றது மற்றொன்று.
அருகில் நின்ற மூத்த குரங்கு ஒன்று அவற்றின் தலைகளை தட்டியபடி. ‘‘முட்டாள் தனம் செய்யாதீர்கள்’’ என கோபித்ததோடு,   
‘‘அவர்கள் நம் பாதுகாப்புக்காகவே வில்லேந்தி நம்மை காவல் காக்கிறார்கள்’’  என்றது.
வானரங்கள் அதை வியப்புடன் கேட்டன.  
‘‘ராம, லட்சுமணர் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? தன்னை அண்டியவர்களை  அரவணைப்பவர்கள். விஸ்வாமித்திரர் யாகம் நடத்திய போது அரக்கர்களிடமிருந்து தன்னைக் காக்கும்படி இந்த சகோதரர்களை அழைத்துச் சென்றார். அங்கே பகல், இரவு பாராமல் வில்லேந்தி காத்தனர்.  யாகத்தைக் குலைக்க வந்த மாரீசன், சுபாகு என்ற அரக்கர்களை விரட்டினர்’’
 தவறை உணர்ந்த வாரனங்கள் அமைதியாயின.  
‘‘உங்களுக்கே தெரியும், அனுமன் கடலை கடக்க எத்தனை பாடுபட்டான் என்பது தெரியும் அல்லவா? மைந்நாக மலை, சுரசை, சிம்ஹிகை, அங்காரதாரை என அரக்கர்கள் பலரை வென்ற பிறகே இலங்கைக்குள் நுழைய முடிந்தது. இப்போது இந்த பகுதியில் அனுமனால் கொல்லப்பட்ட  அரக்கர்களின் வாரிசுகள் நடமாட வாய்ப்புண்டு. அவர்களால் நமக்கு  துன்பம் வரலாம் என்பதால் ராம, லட்சுமணர்கள் காவல் செய்வதை புரிந்து கொள்ளுங்கள்.‘‘ என்றன.
இதைக் கேட்டு உற்சாகம் பெற்ற வானரங்கள் இன்னும் வேகமாக பணியாற்றின.
(சென்னையை அடுத்த மதுராந்தகம் ஏரியைக் காத்ததும், திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் கோயில் அருகே தனி கோயில் கொண்டு அங்குள்ள ஏரியைக் காத்த மாண்பாலும்,  கலிகாலத்திலும் அவர்கள் நம் காவல் தெய்வங்களாகவே திகழ்வதை உணரலாம்)


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.