Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » திருந்திய திருடன்
 
பக்தி கதைகள்
திருந்திய திருடன்


அரண்மனைக்குள் திருடன் ஒருவன் புகுந்தான். அந்தப்புரத்தை நெருங்கிய போது, ராஜாவும், ராணியும் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.
“மன்னா! நம் மகளுக்கு ஒரு சாதுவைத் திருமணம் செய்து வைக்க வேண்டும். பக்திமானிடமே நம் பெண் நிம்மதியாக வாழ்வாள். அவன் பொறுமைசாலியாக இருப்பான்,’ ’என்றாள். ராஜாவும் அதை ஒப்புக்கொண்டு, “அதற்கென்ன கண்ணே! நாளையே நாம் ஆற்றங்கரைக்கு கோயிலுக்குச் செல்வோம். அங்கே தியானத்தில் இருக்கும் சாதுக்களில் ஒருவரைத் தேர்வு செய்வோம்,” என்றான். திருடனுக்கு பளிச்சென பொறி தட்டியது. “ சாதுவைப் போல் வேடமிட்டு, ஆற்றங்கரையில் போல் தியானத்தில் இருப்பது போல் நடிக்கலாம். அதிர்ஷ்டம் இருந்தால் ராஜாவின் மருமகன் ஆகலாம். அதன்பின் தினமும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்” என முடிவெடுத்தான். அரண்மனையை விட்டு வெளியேறி ஆற்றங்கரையில் அமர்ந்து கொண்டான். மறுநாள் ராஜாவும், ராணியும் மாப்பிள்ளை தேடும் படலத்தை தொடங்கினர். அங்கிருந்த துறவிகள் அனைவரும் திருமணத்துக்கு மறுக்க, துறவி வேடமிட்ட திருடன் மட்டும் சம்மதித்தான். அவனை பல்லக்கில் ஏறுமாறு ராஜா சொன்னதும், அவனது மனதில் மாற்றம் ஏற்பட்டது.
‘‘துறவியாக வேடமிட்டதற்கே இவ்வளவு மரியாதை என்றால், உண்மையான துறவியாக மாறி விட்டால், இன்னும் எவ்வளவு மரியாதை கிடைக்கும்?,” எனக்கருதி நடந்ததை ராஜாவிடம் சொல்லி மன்னிப்பு கேட்டான். மக்கள் போற்றும் துறவியாக வாழ்ந்தான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.