Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அண்ணன் வாக்கைக் காத்த தம்பி
 
பக்தி கதைகள்
அண்ணன் வாக்கைக் காத்த தம்பி

 ராமனைப் போரில் வீழ்த்தினால், வேறு வழியின்றி சீதை தனக்கு மாலை சூட்டுவாள் என்ற கனவில் ஆழ்ந்திருந்தான் ராவணன்.
போர்க்களத்திற்குச் செல்லும் முன், ராமனின் படைபலத்தைப் பற்றி அறிய விரும்பினான். அதற்காக தன் அமைச்சர்களான சுதன், சாரணனிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தான்.
ஆனால் ராமன் அணியில் விபீஷணன் இருப்பதை மறந்து விட்டானே?  ராவணனின் பலம், பலவீனத்தை முழுமையாக அவன் ராமனுக்குச் சொல்லியதன் அடிப்படையில் கருட வியூகமாக நின்று, ராவணனின் கோட்டைக்குள் வானரப்படை புகுந்திட திட்டம் தயாரானது. .
இந்நிலையில் சுகன், சாரணன் இருவரும் வானரமாக உருமாறி ராமனின் வானரப்படையில் நுழைந்தனர். ஒற்றர்களான அவர்களை அடையாளம் கண்டு கொண்ட விபீஷணன், கயிறால் கட்டி இழுத்து ராமன் முன் நிறுத்தினான்.
. ‘‘நீங்கள் நேராக என்னிடம் கேட்டிருந்தாலே படைபலத்தைப் பற்றி விரிவாக சொல்லியிருப்பேனே... அனாவசியமாக குற்றவாளியாக  சிக்கியிருக்க வேண்டாமே…!’’ என ஆறுதலாகப் பேசினான் ராமன்.
 ராமனின் பேச்சு மற்றவர்களுக்கு எரிச்சல் மூட்டியது. ஆனால் அமைதியாக காக்கும்படி கையமர்த்தி, ‘‘நம் படைபலத்தைத் தெரிந்து கொள்வதால் ராவணன்  என்ன செய்துவிட முடியும்? போகட்டும்! விட்டு விடுங்கள்’’
‘‘இலங்கைக்கு துாது சென்ற போது அனுமனை எவ்வளவு கொடுமைக்கு ஆளாக்கினார்கள்! துாதுவனுக்கு உரிய குறைந்தபட்ச மரியாதை கூட தரவில்லையே! அப்படியிருக்க ஒற்றர்களான இவர்களை உயிருடன் அனுப்பக் கூடாது’’ என வாதிட்டனர்.  
 ‘‘நியாயம், தர்மத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவை துணையாக இருக்கும் வரை நமக்குத் தோல்வியில்லை,’’ என்ற ராமன், ஒற்றர்களை உற்று நோக்கினான். ‘‘நீங்கள் இருவரும் சுதந்திரமாக சுற்றிப் பாருங்கள். தேவையான விபரங்களை சேகரியுங்கள்.  வானரத் தலைவர்கள்.... ஏன் விபீஷணன் கூட உங்களுக்கு உதவுவான்’’ என்ற போது சுதனும், சாரணனும் அவமானத்தால் கூனிக் குறுகினர். ‘இந்தப் பெருந்தகை எங்கே, ராவணன் என்னும் சிறுமதியன் எங்கே!’ என மனதுக்குள் வெதும்பியபடி, கண்ணீருடன் கை கூப்பினர்.  
அவர்களைத் தட்டிக் கொடுத்த ராமன், படை விபரங்களை தெரிவிக்கும்படி தன்னைச் சார்ந்தவர்களுக்கு உத்தரவிட்டான்.
அவர்களும் ராவணனிடம் சென்று நடந்ததை எல்லாம் தெரிவித்தனர்.  
வானரப்படையுடன் தன் படைபலத்தை ஒப்பிட்ட ராவணன் திருப்தி கொண்டான்.
 ‘‘போர் முரசு முழங்கட்டும்’’ என இடிக் குரலில் அரக்கர்களுக்கு உத்தரவிட்டான்.
ஆனால், அடுத்தடுத்து ஏற்பட்ட போர் நிலவரம் ராவணனுக்கு சலிப்பை ஏற்படுத்தியது.
ஆமாம்... பிரஜங்கன், ஜம்புமாலி, பிரதபனன், வஜ்ரமுஷ்டி, நிகும்பன், வித்யுன்மாலி, மகாபார்கவன், வஜ்ரதமிஷ்டன், மகாகாயன், யமசத்ரு, சுகன், சாரணன், கரன், துாஷணன், திரிசிரஸ், துாமராக்கன், வஜ்ஜிரத மிஷ்டிரன், அகம்பனன், நராந்தகன், மகா நாதன், சமுன்னதன், பிரகஸ்தன் முதலான சேனைத் தலைவர்கள் போரில் மாய்ந்தனர். அடுத்து தம்பி கும்பகர்ணனும், மகன் அதிகாயனும் வீழ்ந்த செய்தி கேட்டு துடித்து போனான்.
இனி யாரையும் இழக்க விரும்பாத நிலையில், தானே போர்க்களத்தில் நேரில் குதிக்கத் தீர்மானித்தான்.
ஆனால் தர்மதேவதை அவனுக்கு முற்றிலும் எதிராக இருந்தது.
ராமனின் பாணங்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு நிராயுதபாணியாக ஆனான். இந்நிலையில் கருணை மிக்கவனான ராமன், ‘இன்று போய் நாளை வா’ என்று சொல்லி அனுப்பினான். அவமானத்தால் மலை போன்ற தன் உருவம் எறும்பு போல மெலிந்ததாக மனம் நொந்தான். தேர் மீதேறி வீறுகொண்டு புறப்பட்ட அவன்,  இப்போது எல்லாம் இழந்து, தனியனாகத் திரும்ப வேண்டிய அவலம் ஏற்பட்டது!
அவனைப் பார்த்து அதிர்ந்த மகன் இந்திரஜித், தந்தையின் அவமானத்துக்கு பழி வாங்குவதாக சபதம் செய்தான். ராமனின் படையின் முன்னே வந்து மாயம் பல புரிந்தான். ராம, லட்சுமணரை அவன் பிரம்மாஸ்திரத்தால் தாக்க மூர்ச்சித்து விழுந்தனர். இதைக் கண்டு பொறுக்க முடியாத சுக்ரீவன், அங்கதன் முதலான படைத் தளபதிகள் விம்மியழுதனர். அச்சமயம் ஜாம்பவான், ‘‘அனுமா... இமயமலையில் உயிர் மீட்கும்  சஞ்சீவி மூலிகை உள்ளது. அதை கொண்டு வந்தால் ராம, லட்சுமணரை உயிர்ப்பிக்கலாம்,’’ என யோசனை தெரிவித்தார்.
உடனே விண்ணில் பறந்தான் அனுமன். சஞ்சீவி மலையை அடைந்தான். மூலிகையைத் தேட நேரமில்லாததால், அந்த மலையை அப்படியே பெயர்த்துக் கொண்டு வந்தான். மூலிகைகள் நிறைந்த காற்று பட்டதுமே ராமன், லட்சுமணர் மூர்ச்சை தெளிந்தனர்.
தொடர்ந்து போரிட அவர்கள் தயாராயினர். திடீரென வானில் மாயமாகி தேர் மீது நின்றபடி தோன்றினான் இந்திரஜித். இந்திர அஸ்திரத்தை அவன் மீது ஏவினான் லட்சுமணன்.  அந்த அஸ்திரம் குறி பிசகாமல் இந்திரஜித்தின் கழுத்தை அறுத்துச் சென்றது.
மகன் இறந்த செய்தியை அறிந்தான் ராவணன். மாயாஜாலத்தால் உருவம் மாறி, பிறரை மறைந்து தாக்கும் ஆற்றல் மிக்க மகன் இறந்ததை எண்ணிக் கொதித்தான். போர்க்களத்துக்குப் புறப்பட்ட அவன், முதலில் கொல்லப்படவேண்டியவன் விபீஷணன் தான் என முடிவெடுத்தான்!  எதிரியைக் கூட மன்னிக்கலாம், துரோகியை எப்படி மன்னிப்பது?
சக்தி வாய்ந்த அஸ்திரம் ஒன்றை விபீஷணன் மீது ஏவினான்.
 ‘‘இது என்னை நிச்சயமாகக் கொன்று விடும் ஆற்றல் மிக்க பாணம் இது! என்னைப் பற்றிக் கவலை வேண்டாம். ராவணன் மீதான தாக்குதலை  தொடருங்கள்.’’ என அருகில் நின்ற லட்சுமணனிடம் கேட்டுக்கொண்டான் விபீஷணன்.
ஆனால் அடைக்கலமாக இருப்பவன்  கண் எதிரில் அழிவதைக் காண லட்சுமணனால் இயலவில்லை. இது ராமனின் பண்புக்கும், செயலுக்கும் இழிவைத் தரும் எனக் கருதினான். விபீஷணனைக் காப்பது தன் கடமை என முடிவெடுத்தான்.
விபீஷணனுக்கு முன்னால் போய் நின்று அஸ்திரத்தைத் தன் மார்பில் ஏற்ற லட்சுமணன், மயங்கி விழுந்தான்.
விபீஷணன் உள்ளிட்ட அனைவரும் பதற்றத்தில் துடித்தனர். ராம, லட்சுமணரின் மயக்கம் தெளிய உதவிய சஞ்சீவி மலையை மறுபடியும் கொண்டு வந்தான் அனுமன். அதன் காற்றை சுவாசித்த லட்சுமணன் இரண்டாம் முறையாக உயிர்த்தெழுந்தான்.
லட்சுமணனுக்கு துணைநின்ற அனுமனை ஆரத்தழுவினான் விபீஷணன். பிறகு தன் உயிர் காத்த லட்சுமணனையும் கட்டிக் கொண்டான்.
அனுமன் முயற்சியால் தம்பி காப்பாற்றப்பட்டதை எண்ணி மகிழ்ந்தான் ராமன். தன் வாக்கைக் காக்க உயிர்த் தியாகம் செய்யவும் தயாரான தம்பியைப் பெருமிதத்துடன் பார்த்தான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.