Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஜயந்தன் சிறைப்பட்டான்
 
பக்தி கதைகள்
ஜயந்தன் சிறைப்பட்டான்


சீர்காழியில் தனி்த்திருந்த அயிராணி தன்னை பாதுகாக்கும் காவல் தெய்வமாகிய சாஸ்தாவை அன்பு மேலிட வணங்கினாள். சாஸ்தா, ஐயனார், ஐயப்பன் என பக்தர்களால் போற்றப்படுகின்ற ஹரிஹர புத்திரரைப் பற்றி கந்த புராணத்தில் கச்சியப்பர் அற்புதமாகப் பாடுகிறார்.
செய்ய சடை மேல் சிறந்த மதிக்கோடு புனை
துய்யவனும் வேலை துயின்றோனும் சேர்த்தளித்த
ஐயன் எமக்கிங்கோர் அரண் ஆகியே இருக்க
நையல் முறையாமோ? நங்காய் நவிலுதியால்
ஐயப்பன் தன் வீரர்களுள் ஒருவரான மகாகாளரை அழைத்து இந்திராணிக்கு  உடனிருந்து பணிபுரிவாய் என்றார். கயிலாயம் நோக்கிச் சென்ற கணவனார் நெடுங்காலம் ஆன பிறகும் திரும்பி வரவில்லை. புதல்வன் ஜயந்தனும் பக்கத்தில் இல்லை. அதனால் உடல் மெலிந்து உள்ளம் உருகினாள் இந்திராணி. தினமும் சிவபூஜை செய்து மனமார மகாதேவனை வேண்டிக் கொண்டாள்.
வெள்ளிமலை மன்னவா!
வேதம் நீ அல்லவா!
அஞ்செழுத்தும் என்தன் நெஞ்செழுத்தல்லவா!
ஐம்புலனும் உன்தன் அடைக்கலம் அல்லவா!
அஞ்சும் என் நெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா!
அபாயம் நீக்க வரும் சிவாயம் அல்லவா!
தேவர்குரல் கேட்டு உன் திருவடியைக் காட்டு!
அபயகரம் நீட்டு உன் அருள்முகத்தைக் காட்டு!
சூரபத்மனின் தங்கை அஜமுகியும், அவளது தோழி துன்முகியும் நிலவுலகிற்கு வந்து அங்கும் இங்குமாக உலா வந்த போது சீர்காழியில் சிவபூஜை செய்து கொண்டிருந்த இந்திராணியைப் பார்த்து விட்டனர். அடுத்த வினாடியே அஜமுகி தன் அண்ணனிடம் எப்படியாவது இந்திராணியை அழைத்துச் சென்று விட வேண்டும் என்று எண்ணினான். இருவரும் இந்திராணி அருகே வந்தனர்.
‘‘பேரழகு கொண்ட இந்திராணியே! தனித்து இங்கு இருக்கலாமா? நீ இருக்க வேண்டிய இடம் என் அண்ணன் அமர்ந்திருக்கும் அரியணை! அவன் அருகில் அல்லவா நீ அமர வேண்டும். ஆயிரத்தெட்டு அண்டங்களையும் தனி ஒருவனாக ஆட்சி செய்யும் அவனின் பட்டத்து ராணியாக நீ பரிணமிக்க வேண்டும். என்னுடன் வா! ஏற்ற வழியை ஏற்படுத்தித் தருகிறேன்.’’ என்றாள்.
அஞ்சி நடுங்கினாள் அயிராணி. அச்சத்தால் மேனி முழுவதும் வியர்வை அரும்பியது. ஆத்திரம் மேலிட அஜமுகி தன் கைகளை நீட்டி இந்திராணியை இழுத்தாள்.
‘‘மறுக்காமல் என்னோடு வந்து விடு. வலிய வரும் வாய்ப்பை நழுவ விடாதே! சூரபத்மனோடு சுகவாழ்வு வாழலாம். காதுகளைப் பொத்திக் கொண்டு கதறிய இந்திராணியை துன்முகியும் பிடித்து இழுக்க முயன்றாள். அப்போது காவல் புரிந்த மகாகாளர் வெடுக்கென்று உடைவாளால் இருவரின் கைகளையும் துண்டித்தார்.  குருதி கொட்டும் கைகளுடன், ‘அண்ணா...அண்ணா...’ என்று அலறினாள் அஜமுகி.
வீரமகேந்திர புரத்தின் வீதிகளில் கண்ணீர் ஆறாகப் பெருக கைகளில் ரத்தம் அருவியாக வழிய அஜமுகியும், துன்முகியும் வருவதைக் கண்டு அனைவரும் வியப்பும், அதிர்ச்சியும் அடைந்தனர். சூரபத்மனின் தங்கையைத் தொடுவதற்குக் காற்றும் கூட அஞ்சுமே... இந்த காரியத்தைச் செய்தது யார்? என எல்லோரும் தங்களுக்குள்ளேயே வினா எழுப்பினர்.  
கை அறுபட்ட நிலையில் அரசவைக்குள் கதறிய படியே வந்த தங்கையைக் கண்டதும் சூரபத்மன் ஆறாத்துயரமும், அடக்க முடியாத ஆத்திரமும் பொங்க, ‘என்ன நடந்தது? இது யார் செயல்?’ எனச் சீறினான். இடியோசை போன்ற அவன் குரல் கேட்டு அண்டங்கள் நடுங்கின. அஜமுகியின் கண்ணீரும், செந்நீரும் சூரபத்மனின் கோபக் கனலைக் கொழுந்து விட்டு எரியச் செய்யும் எண்ணெய்த் துளிகளாக அமைந்தன.
‘தம்பியராகிய நீங்கள் இருக்க, கோடானு கோடி சேனைகள் இருக்க, அத்தனை அண்டங்களையும் மொத்தமாக அழிக்கும் ஆயிரக்கணக்கான அஸ்திரங்கள் இருக்க, இமைப்போதில் செல்லும் இந்திர ஞாலத்தேர் இருக்க, இதோ இவ்விடத்தே மூவுலக வேந்தன் என நானும் முன்இருக்க என் அன்புத் தங்கைக்கு இப்படியொரு ஆபத்து நேர்ந்து விட்டதே!
வானமும் வையமும் வளர்ந்த வான் புகழ் ஊனம் உற்றதே!
பெருமூச்செறிந்து பொங்கினான் சூரபத்மன்
அவன் சீற்றத்தில் திசைகள் அதிர்ந்தன.
பார் நடுங்கின! விண் எலாம் நடுங்கின! பரவை
நீர் நடுங்கின! அயன்பதம் நடுங்கின! நெடியோன்
ஊர் நடுங்கின! அவுணரும் நடுங்கினர்! உலகத்து
ஆர் நடுங்கிலர்? அவன் சினம் சிறியதோ அன்றே.
அப்போது பானுகோபன், ‘‘தந்தையே! என் அத்தையின் கரங்களை வெட்டியவர்களின் சிரங்களைக் கொய்கிறேன்! தேவர்கள் அனைவரையும் சிறையில் தள்ளுகிறேன்! இந்திராணியை இங்கே இழுத்து வருகின்றேன்!’’ என்றான்.
படைகளுடன் பானுகோபன் புறப்பட்டான். சூரபத்மன் பிரம்ம தேவனைக் கூப்பிட்டு அஜமுகிக்கும், அவளது தோழிக்கும் கைகள் வெட்டப்படும் போது உடந்தையாக நீயும் இருந்தாய் போலும். உடனே இருவர் கரங்களையும் பழையபடி ஆக்கு!’’ என ஆணையிட்டான்.
துன்முகியோடு சென்ற பானுகோபன் சீர்காழி சென்றான். அங்கே இந்திராணியைக் காண முடியவில்லை. அதனால் இந்திரலோகம் சென்றாள். அமராவதி நகரம் தன் அழகிழந்து காணப்பட்டது. தாயும், தந்தையும் இன்றி தனியாக தேவர்களுடன் ஜயந்தன் மட்டும் இருந்தான்.  
சூரனின் மகன் பானுகோபன் வருகிறான் என தேவர்கள் ஜயந்தனிடம் எச்சரித்ததும், ‘வருவது வரட்டும்! வீரத்துடன் அவனை எதிர்கொள்ளலாம்.  ஆற்றல் முழுவதையும் ஒன்றுகூட்டி நாம் பானுகோபனுடன் மோதிப் பார்ப்போம்‘’ என்றான்.  
இந்திர லோகம் வந்தும் தேவராஜனையும், அவன் தேவியையும் காணாமல் சீற்றம் அடைந்த பானுகோபன் ஜயந்தனுடன் போரில் இறங்கினான். ஐராவதம் என்னும் வெள்ளை யானையின் மீதேறி ஜயந்தன் போர்க்களம் வந்தான்.
‘இந்திரன் மகனே! வா! தொட்டிலில் குழந்தையாகத் தவழ்ந்த போதே சூரியனைப் பற்றியவன் நான்! என் முன் நீ எம்மாத்திரம்?
‘வருதி இந்திரன் மதலை!
பருதி போலவே நின்னையும் இருஞ்சிறைப் படுப்பன்’  
பொருதி வல்லையேல்!
நெடுநேர யுத்தத்திற்குப் பிறகு ஜயந்தனையும், தேவர்கள் அனைவரையும் சிறைப்படுத்தினான் பானுகோபன். இந்திரபுரியைத் தீக்கிரையாக்கினான். ‘இந்திர போகம்’ என்பார்கள். ஊழிக்காலம் வரை அழியாது பேரொளி வீசும் அமராவதியே அனலில் கருகியது என்றால் இவ்வுலகில் நிலை பெற்றது என்று எதை நாம் நிச்சயிப்பது.
‘யாரும் வாழிய செல்வம் தன்னை
நிலை என மதிக்கலாமோ? ’’
என பாடுகிறார் கச்சியப்பர்.
வெற்றி பெருமிதத்துடன் பானுகோபன் வீரமகேந்திரபுரிக்குத் திரும்பியதும், தந்தையிடம் நடந்ததை விவரித்தான். சிறைப்பட்ட ஜயந்தனையும், தேவர்களையும் சித்ரவதைக்கு உள்ளாக்கி இருண்ட பாழ்பட்ட சிறைகளில் அடைக்க உத்தரவிட்டான் சூரபத்மன். பானுகோபனை மகிழ்ச்சியுடன் ஆரத் தழுவினான்.
..............


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.