Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » லட்சுமி கடாட்சம்
 
பக்தி கதைகள்
லட்சுமி கடாட்சம்


அர்ஜுனனும், கிருஷ்ணரும் தெருவில் உலவிக் கொண்டிருந்த போது முதியவர் ஒருவர் தர்மம் செய்யும்படி கேட்டார்.          அர்ஜுனன் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தான். முதியவருக்கு மகிழ்ச்சி.      
 ‛‛ஆகா... இது நம் குடும்பத்திற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு போதுமே!’’ என்றெண்ணி வீட்டுக்கு புறப்பட்டார். இதைக் கவனித்த  திருடன் ஒருவர், பொற்காசுகளை வயோதிகரிடமிருந்து பறித்துச் சென்றான். சில நாட்கள் கழிந்து, மீண்டும் அவ்வழியே வந்த முதியவர் அர்ஜுனனிடம் நடந்ததைச் சொல்ல, விலையுயர்ந்த நவரத்தினக் கல்லைக் கொடுத்து, இதையாவது பத்திரமாக கொண்டு செல்லும்படி கூறினான்.                  

முதியவரும் கவனமாக வீட்டுக்குக் கொண்டு சென்றார். மனைவி, மகன்களிடம் கூட சொல்லாமல், பரணில் இருந்த பானையில் ஒளித்து வைத்தார். இதையறியாத அவரது மனைவி பரணிலிருந்த பானையை எடுத்துக் கொண்டு ஆற்றுக்கு தண்ணீர் எடுக்கச்  சென்றாள். பானையைக் கழுவும் போது உள்ளிருந்த கல் ஆற்றில் விழுந்தது.                  

அவள் தண்ணீர் பானையுடன் வீட்டில் நுழைந்த போது, வெளியே சென்றிருந்த முதியவரும் வந்து விட்டார். மனைவியைக் கண்டு அதிர்ச்சியாகி ‛‛கல் எங்கே?’’ என மனைவியைக் கேட்டார் .                  

எதுவும் அறியாமல் அவள் விழிக்க, ஆற்றிற்குச் சென்று பல மணி நேரமாகத் தேடியும் பலனின்றி திரும்பினார்.                  

சில நாட்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்ஜுனனும் முதியவரை பார்க்கும் போது, அவர்  நடந்ததைக் கூறினார்.  ‛‛இவர் அதிர்ஷ்டக்கட்டை,’’  என்றான் அர்ஜுனன் .                  
 ‛‛இந்த முறை நீ இவருக்கு இரண்டு காசு மட்டும் கொடு,’’ என்றார் கிருஷ்ணர்.                  

அர்ஜுனனனும், அதைக் கொடுத்து அனுப்பி விட்டு, "இரண்டு காசுகள் அவருக்கு என்ன சந்தோஷத்தை கொடுத்து விடும்?"  எனக் கேட்டான்.                  

எனக்கும் தெரியவில்லை. இருந்தாலும் என்ன நடக்கிறது பார்க்கலாம் வா,"  என்ற கிருஷ்ணர் முதியவரைப் பின் தொடர்ந்தார்.   அர்ஜுனனும் உடன் சென்றான்.                

செல்லும் வழியில் மீனவன் ஒருவர் உயிருடன் வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கிக் கொள்ளும்படி முதியவரிடம் வேண்டினான். .                  

 யோசித்த முதியவர், ‘இந்தக் காசுகள் தன் குடும்பத்தினரின் ஒருவேளை பசியைக் கூட போக்காது’  என்றெண்ணி அந்த மீன்களை வாங்கி ஆற்றில் உயிருடன் விட்டால் புண்ணியமாவது கிடைக்கும் எனக் கருதினார்.                    

அப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டார். இன்னொரு மீனின் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதைப் பார்த்த அவர், அதன் வாயைப் பிளந்து பார்த்தார்.                   

அதைப் பார்த்ததும் பிரமித்துப் போனார். அது அவரது  மனைவி ஆற்றில் தவற விட்ட விலையுயர்ந்த நவரத்தினக் கல் .                  
சந்தோஷ மிகுதியால் கோபாலா கோவிந்தா என கிருஷ்ணரின் திருநாமத்தைச் சொல்லி கூச்சலிட்டார் .                  

அதே நேரம் யதார்த்தமாக அந்த வழியே திருடன் வர, முதியவரின் கூச்சலைக் கேட்டு திடுக்கிட்டு போனான். அந்த சமயத்தில் அங்கு வந்த கிருஷ்ணரும், அர்ஜுனனும் சமயோஜித புத்தியால் முதியவரிடம் திருடியவன் இவனே என யூகித்து திருடனைத் தடுத்தனர்.  அவனிடமிருந்த திருட்டுப் பொருட்களை பறிமுதல் செய்து முதியவருக்கு கொடுத்தனர்.

 ‛‛வாழ்வில் தான் எத்தனை விசித்திரங்கள். அதிலும் இது போன்ற நிகழ்வுகள் எப்படி சாத்தியம்? " எனக் கேட்டான் அர்ஜுனன்.                   

‘‘முன்பு கொடுத்த பணத்தை தன் குடும்பம் மட்டுமே அனுபவிக்க வேண்டும் சுயநலத்துடன் செயல்பட்டார். அடுத்து நீ கொடுத்த விலையுயர்ந்த கல்லை தானும் உபயோகிக்காமல், மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்தார். ஆகவே அவை பயனளிக்கவில்லை. ஆனால் இப்போதோ தன்னிடமிருந்த இரு நாணயங்கள் தனக்கு உதவாவிட்டாலும், இன்னொரு உயிராவது வாழட்டும் எனக் கருதினார். இந்த புண்ணியத்தால் இழந்த செல்வத்துக்கும் மேலாக கிடைக்கப் பெற்றார். பொதுநலம் உள்ளவருக்கே லட்சுமி கடாட்சம் கிடைக்கும்’’ என்றார்.    


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.