Advertisement

மலர்ந்தது கார்த்திகை: மாலை அணிந்து விரதம் துவக்கிய பக்தர்கள்

கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர். இதனால் கோயில்களில் ஐய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜை கார்த்திகை மாதம் முதல் தேதி துவங்குவது வழக்கம். இந்த நாளில் ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவங்குவர். சபரிமலை கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கோயில்களில் குருசுவாமி துணையுடன் மாலையணிந்து 41 நாட்கள் கடும் விரதமிருப்பது வழக்கம். இந்த ஆண்டு கார்த்திகை முதல் நாளான இன்று (17ம் தேதி) காலை முக்கிய கோயில்களில் குருசுவாமி துணையுடன் ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவக்கினர். இதனால் கோயில்களில் வழக்கத்திற்கு மாறாக கோயில்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலை அணியும் பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் கோயில் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு, மாலை அணிந்து கொண்டனர். கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவில், சென்னை ஐய்யப்பன் கோவில், ராமநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில், நாகர்கோவில் நாகராஜாகோயில், பார்வதிபுரம் ஐய்யப்பன் கோயில், கன்னியாகுமரிபகவதி அம்மன் கோயில், குமாரகோவில் முருகன் கோயில், வெள்ளிமலை முருகன்கோயில், மண்டைகாடு பகவதிஅம்மன் கோயில், வெட்டுவெந்நி சாஸ்தா கோயில், திருவட்டார், தக்கலை, குழித்துறை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவக்கினர்.

Advertisement
 
Advertisement