Advertisement

புதுச்சேரி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவிப்பு

புதுச்சேரி: கார்த்திகை முதல் நாளான நேற்று 17ல், புதுச்சேரியில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.சபரிமலைக்கு செல்பவர்கள் கார்த்திகை முதல் நாளன்று மாலை அணிந்து, 48 நாட்கள் விரதம் கடைபிடித்து, கோவிலுக்கு செல்வது வழக்கம். கார்த்திகை முதல் நாளான நேற்று (நவம்., 17ல்), புதுச்சேரியில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.

புதுச்சேரி கோவிந்த சாலை பாரதி புரத்தில் உள்ள அய்யப்பன் கோவில், சித்தானந்தா கோவில், வேதபுரீஸ்வரர் கோவிலில், பக்தர்கள் நேற்று அதிகாலை மாலை அணிந்து கொள்வதற்காக திரண்டனர். கோவில் வளாகத்தில் உள்ள அய்யப்பன் சன்னதியில், பக்தர்களுக்கு குருசாமி மாலை அணிவித்தார்.புதுச்சேரியில் கடை வீதியில் சந்தன மாலை, துளசி மாலை, ருத்ராட்ச மாலை உள்ளிட்ட பல்வேறு வகையான மாலைகள், வேட்டி, துண்டு விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.

Advertisement
 
Advertisement