Advertisement

மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

சூலுார்: முத்துக்கவுண்டன்புதுார் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். சூலுார் அடுத்த முத்துக்கவு
ண்டன்புதுாரில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பழமையானது. இங்கு, விமானம் செப்பனிடுதல், வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன.

கடந்த, 29ம் தேதி மாலை விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து, காப்பு கட்டுதல், புனித நீர்கலசங்கள் வழிபாடு, முதல் காலஹோமம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை, இரண்டாம் கால ேஹாமம், மாலை , 5:30 மணிக்கு மூன்றாம் கால ேஹாமம் நடந்தது. இரவு, யந்திரங்கள் பிரதிஷ்டை மற்றும் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தன. நேற்று காலை, 6:30 மணிக்கு நான்காம் கால ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. புனித நீர் க லசங்கள், மேள , தாள த்துடன் கோவிலை வலம் வந்தன. 10:00 மணிக்கு, விமானம், பரிவாரங்கள் மற்றும் ஸ்ரீமாகாளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மகா அபிஷேகம் மற்றும் தசதானம், தச தரிசனம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

Advertisement
 
Advertisement