Advertisement

திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு 5 டன் மலர்களால் புஷ்பயாகம்

திருப்பதி: திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு, நேற்று மாலை வருடாந்திர புஷ்பயாகம் நடந்தது.திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு கார்த்திகை மாதம், 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.

அதில், ஏற்பட்ட நிறை குறைகளை சரி செய்ய வருடாந்திர புஷ்பயாகத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் தாயாரின் வருடாந்திர பிரம்மோற்சவம் பஞ்சமி தீர்த்தத்துடன் நிறைவு பெற்றதையடுத்து, நேற்று மதியம் தாயாருக்கு புஷ்பயாகம் நடந்து.அதை முன்னிட்டு, தாயாருக்கு காலை வசந்த மண்டபத்தில் பால், தயிர், இளநீர், பழரசங்கள், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன்பின், தாயாரை அலங்கரித்து தீப, துாப ஆராதனைகள் நடத்தி மண்டபத்தில் எழுந்தருள செய்தனர்.அதற்கு பின் ரோஜா, அரளி,சாமந்தி, மல்லிகை, முல்லை, ஜாதிமல்லி, சம்பங்கி உள்ளிட்ட மலர்கள், துளசி, மருவம், வில்வம் உள்ளிட்ட இலைகள் ஆகியவற்றால் அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், 500 ரூபாய் கட்டணம் செலுத்தி பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தேவஸ்தானம் சிறப்பு பிரசாதங்களை வழங்கியது. இதற்காக, 3 டன் எடையுள்ள பலவகையான மலர்கள் மற்றும் பத்திரங்கள் பல மாநிலங்களிலிருந்து தேவஸ்தானம் தருவித்து. இதை முன்னிட்டு சில ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது.

Advertisement
 
Advertisement