Advertisement

சபரிமலையில் எருமேலி பேட்டை துள்ளல் நிறைவு: 15ல் மகர ஜோதி

சபரிமலை : மகரஜோதிக்கு முன்னோடியாக, அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல், எருமேலியில் நடந்தது. அய்யப்பனின் திருஆபரணம், பந்தளத்தில் இருந்து இன்று புறப்படுகிறது.

சபரிமலையில் ஜன., 15-ல், மகரஜோதி விழா நடக்கிறது. சபரிமலை சீசன் துவங்கிய, கார்த்திகை, 1ம் தேதி முதல், எருமேலியில் பேட்டைத் துள்ளல் நடக்கிறது. மகரவிளக்குக்கு இரண்டு நாட்கள் முன் நடக்கும் அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டைத் துள்ளல் பிரசித்தி பெற்றது.நேற்று பகல், 12:45 மணிக்கு, ஆகாயத்தில் வட்டமிட்டு பறந்த கருடனை கண்டதும், பேட்டை தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து, அம்பலப்புழா பக்தர்கள், யானைகளுடன் பேட்டைத் துள்ளி வந்தனர். வாவர் பள்ளிவாசலை வலம் வந்து, பெரிய சாஸ்தா கோவிலில் நிறைவு செய்த பின், பெருவழிப்பாதை வழியாக சபரிமலை சென்றனர்.

இதுபோல, ஆலங்காடு பக்தர்கள், பகல், 3:00 மணிக்கு வானில் பிரகாசித்த நட்சத்திரத்தை கண்டதும், பேட்டை துள்ளினர். இத்துடன், பேட்டை துள்ளல் நிறைவு பெற்றது.திருவாபரணம் புறப்பாடுமகரவிளக்கு நாளில், அய்யப்பனுக்கு அணிவிக்கும் ஆபரணங்கள், இன்று பந்தளம் வலியக்கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து புறப்படுகின்றன.அதிகாலை, 5:00 மணி முதல், பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டு, பகல், 12:00 மணிக்கு எடுத்துச் செல்லப்படும். இவை, நாளை மாலையில், சன்னிதானம் வந்தடையும்.மகரவிளக்குக்கு முன், பிரசாத சுத்தி பூஜைகள் இன்று நடக்கின்றன.

நாளை அதிகாலை, கணபதி ஹோமத்துக்கு பின், 7:30 மணிக்கு மேல் பிம்பசுத்தி பூஜைகள் நடக்கும்.மகரசங்கர பூஜைமகர விளக்கு நாளில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று, மகர சங்கரமபூஜை. நாளை மறுநாள் அதிகாலை, 2:09 மணிக்கு இந்த பூஜை நடக்கிறது.இந்த நேரத்தில், திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் இருந்து வரும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு, அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். அதிகாலை நேரத்தில் இந்த பூஜை வருவதால், நாளை மாலை, 4:00 மணிக்கு திறக்கப்படும் நடை, நாளை மறுநாள் அதிகாலை, 2:30 மணிக்கு அடைக்கப்படும். மீண்டும், அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்படும்.

Advertisement
 
Advertisement