Advertisement

குன்றத்து கோயிலில் மண்பானை பொங்கல்

திருப்பரங்குன்றம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி களுக்கு மண்பானையுடன் பொங்கல் படைக்கப்பட்டது. கோயிலில் வழக்கமாக தினமும் வெண்கல பானையில் பிரசாதம் தயாரித்து சுவாமிகளுக்கு படைத்து பூஜை நடக்கும். பொங்கலை முன்னிட்டு கோயில் மடப்பள்ளியில் மண்பானையில் பொங்கல் தயாரித்து மூலவர்கள் சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள்

சன்னதிகளில் பானையுடன் பொங்கல் படைக்கப்பட்டு, பூஜை, தீபாராதனை நடந்தது. பின்பு உற்ஸவர்கள் சுவாமி, தெய்வானை முன்பு படைக்கப்பட்டது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் பொங்கலை முன்னிட்டு மூலவர்கள் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகன், ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு வெள்ளி கவசம் சாத்துப்படியாகி பொங்கல் படைத்து பூஜை நடந்தது. ஹார்விபட்டி பால முருகன் கோயிலில் அனைத்து மூலவர்களுக்கும் பொங்கல் படைக்கப்பட்டு பூஜை நடந்தது.

Advertisement
 
Advertisement