Advertisement

திருநீலகண்ட நாயனார் 20ம் ஆண்டு குருபூஜை

வீரபாண்டி: திருநீலகண்ட நாயனாரின், 20ம் ஆண்டு குரு பூஜை விழா நடந்தது. சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், சிவனாடியாருக்கு தொண்டு செய்த, 63 நாயன்மார்களின் ஜென்ம நட்சத்திரத்தில், குருபூஜை நடத்தப்படுகிறது. அதன்படி திருநீலகண்ட நாயனாரின் ஜென்ம நட்சத்திரமான நேற்று, குலாலர் சமூகம் சார்பில், 20ம் ஆண்டாக குருபூஜை விழா, நேற்று நடந்தது. அதில், நீலாயதாட்சாயினி சமேத திருநீலகண்டரின் உற்சவ திருமேனிக்கு, சிறப்பு அபி?ஷகம், சர்வ அலங்காரம் செய்து, பரிவட்டம் கட்டி சிறப்பு பூஜை நடந்தது. கோவில் மூத்த சிவாச்சாரியார் பாலசுப்ரமணியர், 12 ஆண்டு பிரிந்திருந்த திருநீலகண்டநாயனார், நீலாயதாட்சாயினி வாழ்கையில், சிவன் திருவிளையாடல் புரிந்து, ஒன்றுசேர்த்து வைத்த வரலாற்றை, பக்தர்களுக்கு தெரிவித்தார். தேரில், சர்வ அலங்காரத்தில் நீலாயதாட்சாயினி சமேத திருநீலகண்டரை எழுந்தருளச்செய்து, பக்தர்கள் புடைசூழ, கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement
 
Advertisement