Advertisement

சபரிமலை நடை திறப்பு: 18ம் தேதி வரை 5 நாள் பூஜை

சபரிமலை: மாசி மாத பூஜைகளுக்காக நேற்று (பிப்.,13) மாலை 5:00 மணிக்கு தந்திரி கண்டரரு மகஷே் மோகனரருவின் முன்னிலையில் சபரிமலை நடை திறக்கப்பட்டது. ஆழியில் தீ வளர்த்த பின்னர் பக்தர்கள் படியேறி தரிசனத்துக்கு வந்தனர்.

திருநீறு பிரசாதமாக வழங்கப்பட்டது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.இன்று அதிகாலை 5.00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு நெய்யபிஷேகத்தை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து கணபதிஹோமம், உஷபூஜை, களபாபிஷேகம், கலசாபிஷேகம், உச்சபூஜை, புஷ்பாபிஷேகம், தீபாராதனை, அத்தாழபூஜை போன்ற வழக்கமான பூஜைகள் நடைபெறும். இந்த பூஜைகள் 18-ம் தேதி வரை ஐந்து நாட்களும் நடைபெறும். எல்லா நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடக்கும். 18-ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மேல்சாந்தி சுதிர்நம்பூதிரி உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சையில் இருப்பதால் தந்திரி ஆலோசனைப்படி அவர் நேற்று மாலை திறக்கவில்லை. அதற்கு மாற்றாக தந்திரியின் உதவியாளரான பூஜாரி ஒருவர் நடை திறந்தார். பூஜைகளை தந்திரி நடத்தினார்.

Advertisement
 
Advertisement