Advertisement

தஞ்சை பெரியகோவிலில் 2 நாளில் லட்சக்கணக்கானோர் தரிசனம்

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு பக்தர்களின் வருகை அதிகாரித்துள்ள நிலையில், விடுமுறை தினமான இரண்டு நாளில், லட்சக்கணக்கனோர் குவிந்தனர்.

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவிலில், 23 ஆண்டுக்கு பின், கடந்த, 5ம் தேதி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. அன்றை தினமும் மட்டுமே, 5 லட்சம் பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டனர். இதைதொடர்ந்து, சமூக வலை தளங்களில், பெரியகோவிலின் கட்டுமானம், கலைநுட்பம், ராஜராஜசோழன் குறித்து தகவல்கள், படங்கள், வீடியோக்கள் பரவியது. இது பலரையும் பெரிய கோவிலுக்கு வர தூண்டியது. அத்துடன் கும்பாபிஷேகத்தை காண முடியாத பலரும், கடந்த, 6ம் தேதி முதல் நடைபெற்று வரும் மண்டலாபிஷேகத்தில் தரிசனம் செய்ய வந்து குவிகின்றனர்.
இதனால் நாளுக்குநாள் பெரியகோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குவிந்து வருகிறது. இந்நிலையில், விடுமுறை தினமான சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த இரு நாட்களில் மட்டும், ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வந்தனர். கூட்டம் அதிகரிப்பால், பக்தர்கள், 2 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பெரியகோவிலுக்கு நேற்று அதிகளவில் வாகனங்கள் வந்ததால், தஞ்சை நகரமே நேற்று போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது.

Advertisement
 
Advertisement