Advertisement

சீர்காழி குமார சுப்ரமணியர் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு

சீர்காழி: சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலில் 3 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பழமைவாய்ந்த குமார சுப்ரமணியர் ஆலயம் அமைந்துள்ளது.நேற்று இரவு கோவில் குருக்கள் நடராஜ்-50 கோவிலை பூட்டிச்சென்றுள்ளார்.இன்று காலை கோவிலை திறக்க வந்த போது கோவிலின் பூட்டு திறந்தே இருந்துள்ளது.அதிர்ச்சிஅடைந்த நடராஜ் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த குமாரசுப்ரமணியர்,வள்ளி, தெய்வானை ஆகிய மூன்று ஐம்பொன் சிலைகளும் திருடு போய்யிருப்பது தெரியவந்தது.இது குறித்து சீர்காழி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.விரைந்து வந்த போலிசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.கோவில் பூட்டுகள் உடைக்கபடாமல் கள்ள சாவிகள் மூலம் திறக்கபட்டு சிலைகள் திருடபட்டுள்ளது.எனவே பல நாட்கள் திட்டமிட்டே கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ எடைகொண்ட 3 பழமைவாய்ந்த சிலைகள் கணாமல் போனது சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
 
Advertisement