Advertisement

கொரோனாவை விரட்ட மஞ்சள், வேப்பிலை நீர்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி,எஸ்.புதுார் ஒன்றிய கிராமங்களில் கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க,மக்கள் வீட்டு வாசலில் மஞ்சள் நீரில், வேப்பிலை கலந்து வைத்துள்ளனர்.

வேப்பிலை மற்றும் மஞ்சள், பாரம்பரியமாக நம் வீடுகளில், கிருமிநாசினியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நோய் தாக்கத்தின் போது, வீடுகளில் வேப்பிலை கட்டுவதையும், மஞ்சள் கலந்த நீரில் குளிப்பதையும், வழக்கமாகவே கொண்டுள்னர். தற்போது, கொரோனா பீதி காரணமாக, நகர் பகுதிகளில் பல வீடுகளின் முன்பு, வேப்பிலை கட்டப்பட்டுள்ளது. குடங்களில், மஞ்சள் நீர் மற்றும் வேப்பிலை கலந்து, வாசல் நடுவே வைத்து மறந்து போன பழக்கங்களை மீட்டெடுத்துள்ளனர். பிரான்மலை செந்தில் கூறியதாவது: இது நம் பாரம்பரிய பழக்கம். மஞ்சள் மற்றும் வேப்பிலையை தண்ணீரில் கலந்து, இரண்டு வாசல்களிலும் வைத்துள்ளோம். காற்றின் மூலம் பரவும் மணம் கிருமிகளை அண்ட விடாது, என்றார்.பிரான்மலை நேதாஜி இளைஞர் குழு சார்பில் அரைக்கப்பட்ட வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை டேங்கர் தண்ணீரில் கலந்து கிராமம் முழுவதும் தெளித்து வருகின்றனர். இதேபோல் பல்வேறு கிராம எல்லையில் டிரம்மில் மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த நீரும், சோப்பும் வைத்துள்ளனர். கிராமத்திற்குள் வருபவர்கள் எல்லையில் தங்கள் கை மற்றும் கால்களை கழுவிவிட்டு கிராமத்திற்குள் செல்ல வேண்டும் என்று ஒரு கட்டுப்பாட்டை கிராமத்தினர் வைத்துள்ளனர்.

Advertisement
 
Advertisement