Advertisement

கொரோனா தொற்றை நீக்க பிள்ளையார்பட்டியில் ஹோமம்

திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மனிதர்களை பாதுகாக்கவும், பூரணமாக நோய்த்தொற்றை நீக்க வலியுறுத்தி இறைவனை வேண்டி பாஸ்து பதாத்ரஹோமம் நடத்தப்பட்டது.

காலை 9:00 மணிக்கு கோயில் குருக்கள் பிச்சைக்குருக்கள்,சோமசுந்தரம் ஆகியோர் மூலவர் சன்னதி முன்10 கலசங்கள் பிரதிஷ்டை செய்து பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி மெ.மெய்யப்பன், குருவிக்கொண்டான்பட்டி பழ. பழனியப்பன் (எ) செந்தில் முன்னிலையில் ேஹாமத்தைத் துவக்கினர். பின்னர் புனித கலச நீரால் சுவாமி,அம்பாள் ஆகியோருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. இந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை. திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் கொரோனா தொற்று அழிப்பு சிறப்பு வழிபாடு 21 நாட்கள் நடைபெறுகிறது. இக்கோயிலில் உள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஸ்தானீகர்கள் தினசரி 9 பேர் வீதம்1008 பாசுரங்கள் வாசித்து வருகின்றனர். சக்கரத்தாழ்வார் சன்னதி முன் நடக்கும் இந்த வழிபாட்டில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் சிவகங்கை சமஸ்தானத்தை சேர்ந்த இக்கோயிலில் அன்னதானமாக தினசரி பார்சல் மூலம் 50 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.

Advertisement
 
Advertisement