Advertisement

பாக்.,கில் கிருஷ்ணர் கோவில்: எதிர்த்த மனு தள்ளுபடி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், கிருஷ்ணர் கோவில் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரிய மனுக்களை, அந்நாட்டு நீதிமன்றம், தள்ளுபடி செய்தது.

பாக்., தலைநகர் இஸ்லாமாபாதில், முதல் முறையாக கிருஷ்ணர் கோவில் கட்ட, சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக, 20 ஆயிரம் சதுர அடி நிலத்தை, தலைநகர மேம்பாட்டு ஆணையம் ஒதுக்கியது. இதற்கு, பிரதமர் இம்ரான் கானின் கூட்டணி கட்சியான, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -- குவைட் உட்பட, பல்வேறு தரப்பில் இருந்தும், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இஸ்லாமாபாதில், கோவில் கட்ட தடை விதிக்க வேண்டும் என்றும், அதற்கு வழங்கப்பட்ட நிலத்தை திரும்ப பெறக் கோரியும், பாக்., நீதிமன்றத்தில், மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை, பாக்., நீதிமன்றம் நேற்று முன்தினம், தள்ளுபடி செய்தது.

Advertisement
 
Advertisement