Advertisement

கோவில் குளத்தில் அதிகாரிகள் ஆய்வு

ஆவடி, :கோவில் குளத்தில், படிக்கட்டு அமைக்கும் பணிகளை, அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.ஆவடி அருகே, நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த, சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இது, ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.தற்போது, இக்குளத்தை ஆழப்படுத்தி சீரமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதில், 27 லட்சம் ரூபாயில் படிக்கட்டுகள், 10.6 லட்சம் ரூபாயில், குளத்தைச் சுற்றி சுவர் மற்றும் கிரில் கேட் அமைக்கும் பணிகளும் நடக்கின்றன.இப்பணிகளை, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.இது குறித்து, கோவில் செயல் அலுவலர் சீதாராமன் கூறியதாவது:சுந்தரராஜ பெருமாள் கோவில் பல்லவர் காலத்து, 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கோவில் குளத்தை தோண்ட, தோண்ட சேறும் சகதியுமாக வருகிறது.தற்போது, கொரோனா பரவலால் பணிகள் மெதுவாக நடக்கின்றன. குறைந்த பணியாளர்களை வைத்து, குளத்தை துார் வாரும் பணி தொடர்ந்து நடைபெறும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
 
Advertisement