Advertisement

அடிக்கல் நாட்டு விழா: அமெரிக்காவில் சிறப்பு வழிபாடு

வாஷிங்டன்: ராமர் கோவிலுக்கு நாளை(ஆக.,5) அடிக்கல் நாட்ட உள்ள நிலையில், அமெரிக்க கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தவும், வீடுகளில் விளக்கேற்றவும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஹிந்துக் கடவுள் ராமருக்கு, அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான, பூமி பூஜை, நாளை (ஆக.,5) நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். விழாவையொட்டி அயோத்தி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில், ராமர் கோவில் பூமி பூஜை விழாவை, சிறப்பாக கொண்டாட அமெரிக்க வாழ் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ராமர் கோவிலுக்கு பூமி பூஜை நடைபெறும் நேரத்தில், வீடுகளில் விளக்குகள் ஏற்றி வழிபட, அமெரிக்க வாழ் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், அமெரிக்க கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கேபிடல் ஹில் பகுதியில், ராமர் கோவில் டிஜிட்டல் போர்டுகளை சுமந்து வாகனம் சுற்றி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் சிறப்பு வழிபாடுகள் நடக்க உள்ளன. புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில், அயோத்தி ராமர் கோவில், ராமரின் படங்கள் ’3டி’யில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

Advertisement
 
Advertisement