Advertisement

ராமர் கோவில் கட்ட ரூ.41 கோடி நன்கொடை

அயோத்தியில், ராமர் கோவில் கட்ட, 41 கோடி ரூபாய் நன்கொடை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கோவில் நிர்வாகத்திற்கு பொறுப்பேற்றுள்ள, ராம ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர், சுவாமி கோவிந்த் தேவ் கிரி கூறியதாவது:

கடந்த, 4ம் தேதி வரை, 41 கோடி ரூபாய் நன்கொடை வந்துள்ளது. இதில், சுவாமி சித்தானந்த சரஸ்வதி, சுவாமி அவ்தேஷானந்த் கிரி உள்ளிட்ட மதத் தலைவர்களும், பாபா ராம்தேவ் போன்ற பிரபலங்கள் வழங்கிய நன்கொடை சேர்க்கப்படவில்லை. வலைதளம் வாயிலாக, ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோர், கோவில் கட்ட நிதியுதவி அளித்துள்ளனர். இதில் சில பேர், 11 ரூபாய் கூட தந்துள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ளோர் நன்கொடை தர தயாராக உள்ளனர். ஆனால், இதற்கான அன்னிய அன்பளிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் சான்றிதழ் இன்னும் கிடைக்கவில்லை. அது கிடைத்ததும், வெளிநாட்டினரின் நன்கொடை ஏற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Advertisement