Advertisement

விநாயகர் சிலை வைக்க அனுமதி கிடைக்குமா?

உத்திரமேரூர்: கொரோனா ஊரடங்கால் சிலை தயாரிப்பு தொழில் முடங்கியுள்ளதால், விநாயகர் சதுர்த்திக்கு, குறைந்த அளவு உயரம் கொண்ட சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என, இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா, ஆண்டு தோறும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டு கொரோனா ஊரடங்கு உத்தரவால், வரும், 22ல், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது.இதனால், விநாயகர் சிலை தயாரிப்பதற்கான, ஆர்டர்கள் இதுவரை ஒன்றுகூட வரவில்லை என, இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து உத்திரமேரூர் வேடபாளையத்தை சேர்ந்த, விநாயகர்சிலை தயாரிப்பாளர் குமரேசன் கூறியதாவது: கொரோனாவால், ஐந்து மாதங்களாக மண்பாண்டம் விற்பனையும் மந்தமாக உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக, சிலைகள்செய்வதற்கான ஆர்டர்எப்போதும், ஜூன் மாதமே குவிந்துவிடும். கடந்த ஆண்டு, 80 சிலைகளுக்கான ஆர்டர் கிடைத்தது.விநாயகர் சதுர்த்திக்கு இரு வாரங்கள் உள்ள நிலையில், கொரோனா ஊரடங்கால், இதுவரை ஒரு ஆர்டர்கூட வரவில்லை. இருப்பினும், 3 அடி முதல், 5 அடி வரை சிலைகள் செய்து வருகிறேன். கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும், நிபந்தனையுடன், கோவில்களின் அருகில், சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் அமைத்து வழிபாடு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்.அப்போது தான், கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி தவித்து வரும், எங்களைப் போன்ற விநாயகர் சிலைகள் தயாரிப்பாளர்களின் வாழ்வாரத்திற்கு வழிவகுக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
 
Advertisement