Advertisement

ஒப்பிலியப்பன் கோயிலில் பிரமோற்சவ கொடியேற்றம்: குவிந்த பக்தர்கள்

கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் உள்ள வெங்கடாசலபதி சுவாமி கோவிலில் இன்று புரட்டாசி மாத பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன்கோயிலில், புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழா இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 27ம் தேதி வரை தினமும் காலை 7 மணிக்கும் இரவு 8 மணிக்கும் கோவில் பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். செப்.27ம்தேதி திருவோணத்தன்று சிரவண தீபம் புறப்பாடு மற்றும் தீர்த்தவாரி போன்றவை கோயிலின் உள்ளே நடைபெறும்.

முதல் சனிக்கிழமை: ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் அதிகாலை 3.30மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறுவது வழக்கம். இந்த தரிசனத்தின் போது கோவிலில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். அதே போல் இன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் அதிகாலை முதல் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். ஆனால் கோவில் நடை திறக்கப்படவில்லை. இதனால் கோயில் முன்பாக நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சமூக இடைவெளியின்றி குவிந்திருந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் எப்போது கோவில் திறக்கப்படும் என்ற தகவல் ஏதும் அறிவிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பின்னர் காலை 7 மணிக்கு கோவில் திறக்கப்பட்டது. கோவிலில் உள்ள சென்ற பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை, சானிடைசர் போன்ற ஏதும் இல்லாமல் இருந்தது. பின்னர் மூலவருக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு தரிசனம் மட்டுமே நடைபெற்றது. அரச்சனை, ஆரத்தி ஏதும் நடைபெறவில்லை.

Advertisement
 
Advertisement