Advertisement

குன்றத்தில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம்: நவ.29 ல் மகா தீபம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நவ. 29ல் மலைமேல் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

திருவிழா துவக்கமாக நேற்று முன்தினம் மாலை கோயில் அனுக்ஞை விநாயகர் முன்பு யாக பூஜைகளும், விசாக கொறடு மண்டபத்தில் விஷப யாகம், வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தது. கொடியேற்றம்நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர். சிவாச்சார்யார்கள் கொடியேற்றி பட்டு, மா இலை, தர்ப்பை புல் கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டு, அடிப்பாகத்தில் பால் உட்பட பல்வகை திரவிய அபிஷேகங்கள் நடந்தது. வழக்கமாக திருவிழா நாட்களில் தினம் ஒரு வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும். கொரோனா தடையால் காலை, மாலையில் படிச்சட்டத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கோயிலுக்குள் புறப்பாடாகின்றனர்.
மகா தீபம் நவ. 28ல் பட்டாபிஷேகம், நவ.29ல் மலைமேல் மகா தீபம், டிச. 30ல் தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.பாவாடை நைவேதனம்சஷ்டி திருவிழாவின் இறுதி நாளான நேற்று மதியம் 3:00 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம் சாத்துப்படியாகி 108 படி அரிசியில் தயாரான தயிர் சாதம் படைக்கப்பட்டு அதன்மேல் காய்கறிகள், பழங்கள், அப்பம், இளநீர், வடை, வெற்றிலை பாக்கு வைத்து பாவாடை நைவேதன தரிசனம் நடந்தது.

Advertisement
 
Advertisement