Advertisement

திருக்கார்த்திகை விளக்குகள் தயாரிப்பு மும்முரம்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் திருக்கார்த்திகையை முன்னிட்டு தீப விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.

மாவட்டத்தில் நத்தம், வேடப்பட்டி, நொச்சி ஓடைப்பட்டியில் மண் பாண்ட தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். பானைகள், சாமி சிலைகள், வீட்டு அலங்கார பொருட்கள், கார்த்திகை தீப விளக்குகள் செய்து வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். நவ.29ல் திருக்கார்த்திகையை முன்னிட்டு விளக்குகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.விநாயகர், யானை, மயில், அன்னம், குத்து விளக்கு, பஞ்சமுகம், உருளி, மேஜிக், தேங்காய் என பல வகை விளக்குகள் தயாராகி வருகின்றன. சாதாரண அகல் விளக்கு ரூ.2 க்கும், பேன்சி ரக விளக்குகள் ரூ.50 முதல் ரூ.200க்கும் விற்கப்படுகிறது. திண்டுக்கல் கடைகளிலும் விற்பனைக்கு வரத்துவங்கியுள்ளன.தயாரிப்பாளர்கள் கூறுகையில், கொரோனா மற்றும் மழையால் விளக்கு தயாரிப்பு பாதித்துள்ளது. இந்தாண்டு குறைவான ஆர்டர் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் மண் பாண்ட தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

Advertisement
 
Advertisement