Advertisement

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு

திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் வெளியீட்டை, தேவஸ்தானம் நிறுத்தி வைத்துள்ளது.

திருப்பதி திருமலையில் இந்தாண்டு வைகுண்ட ஏகாதசியின் போது, 10 நாட்களுக்கு சொர்க்க வாசலை திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.அதற்கான தரிசன டிக்கெட்டுகளை, நேற்று காலை, 11:00 மணிக்கு, தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடுவதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், நவ., 29ல், டிச., மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் தேவஸ்தான இணையதளத்தில், லாக் இன் செய்ததால், தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதை சரி செய்து, மாலை, 3:00 மணிக்கு டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. இதை தொடர்ந்து, நேற்றும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், 11:00 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்த டிக்கெட்டுகளையும், மறு தேதி குறிப்பிடாமல், தேவஸ்தானம் நிறுத்தி வைத்தது. தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, மீண்டும் இந்த டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என, தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement
 
Advertisement