Advertisement

தர்மபுரி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை

தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி எஸ்.வி., ரோடு சாலைவிநாயகர் கோவிலில், காலை, 6:00 மணிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால், அபி?ஷகம், பூஜை செய்யப்பட்டது. பின்னர் மூலவருக்கு, முத்தங்கி கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, விநாயகர் உற்சவர் எஸ்.வி.,ரோடு, கடைவீதி, மகாத்மாகாந்தி சாலை, வெளிபேட்டைதெரு, சுண்ணாம்புக்காரவீதி வழியாக ஊர்வலம் சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதேபோல், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்னசாகரம் கோடி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வேகேட் குபேரகணபதி கோவில், தேர்நிலையம் செல்வகணபதி விநாயகர் கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, பூஜைகள் நடந்தன.

* சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை, பழைய சப்-ஜெயில் சாலை சித்தி விநாயகர் கோவிலில், நேற்று மாலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, விநாயகருக்கு, 608 லிட்டர் பால் அபி ?ஷகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில், விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Advertisement
 
Advertisement