Advertisement

கருங்கல்பாளையம் குண்டம் விழா: பக்தர்கள் பங்கேற்க தடை

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம், குண்டம் திருவிழாவில் பெரியமாரியம்மன் சந்தனகாப்பு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

ஈரோடு, கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம், தேரோட்ட விழா, கடந்த மாதம், 24ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதையடுத்து, 26ல் கம்பம் நடப்பட்டது. இரவு குண்டம் பற்ற வைத்து, 6ம் தேதி காலை தீ மிதி விழா நடக்கிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், குண்டத்தில் பூசாரி மட்டும் இறங்குகிறார். இதையடுத்து தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. இந்நிகழ்ச்சியிலும், பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 7ம் தேதி இரவு கோவிலில் கரகம், 8ம் தேதி காலை பொங்கல் வைபவம், மாவிளக்கு ஊர்வலம், 9ம் தேதி இரவு, 7:00 மணிக்கு கம்பம் எடுத்து, 10ம் தேதி இரவு, மஞ்சள் நீராட்டு, திருவீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது. குண்டத்தில் இறங்க அனுமதி இல்லாததால், தீ மிதிக்க காப்பு கட்டிய பக்தர்கள், பிற பக்தர்களுடன் சேர்ந்து, தினமும் கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி வழிபடுகின்றனர்.

Advertisement
 
Advertisement