Advertisement

தெய்வ பக்தியுடன் தேச பக்தியையும் வளர்த்து கொள்ள வேண்டும்:காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி

மதுரை:மக்கள் தெய்வ பக்தியுடன், தேச பக்தியையும், குரு பக்தியையும் வளர்த்து கொள்ள வேண்டும், என, காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசினார்.

மதுரை பெசன்ட்ரோட்டில் உள்ள காமகோடி மடத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்று, அவர் மேலும் பேசியதாவது:இன்று குரு வழிபாட்டிற்கு உகந்த நாள். மனிதர்களுக்கு சரியான வழிகாட்ட குரு உபதேசங்கள் தேவைப்படுகின்றன. மனித குலம் மேன்மை அடைய, மனிதர்கள் தானும் வளமாக வாழ்ந்து, பிறருக்கு உதவும் மனம் படைத்தவர்களாக விளங்க உதவுபவை வேதங்கள். மனித நாகரீகம் என்பது வளர வேதகருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டும். வேத கருத்துக்களை சொல்லி தர நல்ல குருமார்கள் தேவை. அவற்றை கோவில்கள் மூலம் முன்னோர்களும், மன்னர்களும் பிரசாரம் செய்தனர். இல்லறத்தில் இருப்பவர்கள் தர்மத்தை பின்பற்ற வேண்டும்.

சன்னியாசிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்லியிருக்கின்றன.பக்தி உணர்வுஇந்திய வாழ்க்கை முறை என்பது பக்தியுடன் சேர்ந்தது. மாட மாளிகைகளில் வாழ்ந்தாலும் பக்தி உணர்வுடன் வாழ வேண்டும். சேவை மனப்பான்மையுடன் தியாக உணர்வை வளர்த்து கொள்ளவேண்டும். இப்படி பல தர்மங்களை சொல்லி கொடுப்பவை இந்திய வாழ்க்கை கலாசார முறை. அதற்கு வழிகாட்டியாக இருப்பவை வேதங்கள். அந்த வேதகருத்துக்களை புரிந்து கொண்டு மனம் லயிக்க வேண்டும்.மதுரை சாஸ்திரங்களை வளர்த்த பூமி. கலைகளை வளர்த்த பூமி. பல்வேறு உற்வசங்கள் நடக்கும் கோவில் நகரம். இந்த நகரத்தில் ஆதிசங்கரர் உபதேசங்களை அறிந்து கொள்ள இங்கு மடத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.ஹிந்து தர்மத்தில் பிறந்தது நம் பாக்கியம். இந்த சனாதன தர்மத்தில் பிறந்ததற்காக பெருமைப்பட வேண்டும் என்றார். முன்னதாக ராமேஸ்வரத்திலிருந்து வந்த சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். பூர்ண கும்ப மரியாதையுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.மடத்தின் தலைவர் ராமசுப்பிரமணியன், பொருளாளர் ஸ்ரீ குமார், ஆடிட்டர் வெங்கடேசன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்தனர்.

Advertisement
 
Advertisement