Advertisement

கோவை கோனியம்மன் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

கோவை: கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த பிப்.,15ல், முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சியோடு துவங்கியது. தொடர்ந்து பூச்சாட்டு, கிராமசாந்தி, கொடியேற்றம் நடந்தது. புலி, கிளி, சிம்மம், அன்னம், காமதேனு, வெள்ளை யானை வாகனங்களில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு கோனியம்மன் அருள்பாலித்தார். விழாவில் நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். இன்று மாலை பரிவேட்டையும், குதிரை வாகன உற்சவமும் நடக்கிறது.

Advertisement
 
Advertisement