Advertisement

கொரோனா விலக 63 நாயன்மார்களுக்கு சிறப்பு பூஜை

பல்லடம்: பல்லடம் அருகே சித்தம்பலத்தில், 63 நாயன்மார்களுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடந்தன.

பல்லடம் அடுத்த சித்தம்பலத்தில் ஸ்ரீஆதி விநாயகர், மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடந்தது. அதை முன்னிட்டு, 48 நாட்கள் மண்டல பூஜை விழாவும் நடந்து வருகிறது. தினம் ஒரு தகவல் எனும் தலைப்பில், ஆன்மீக பேச்சாளர்களின் சிறப்புரை, மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் மாலை, கொரோனா நோய் தொற்று விலக வேண்டி, 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. நடராஜர், அம்பாள், விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களுடன் வைக்கப்பட்ட, 63 நாயன்மார்களின் விக்கிரகங்களுக்கும் பக்தர்கள் பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து, 63 நாயன்மார்களின் சிறப்பு சிறப்பு குறித்த சொற்பொழிவு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் அருள்பாலித்தார். விழா குழுவின் சார்பில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement
 
Advertisement