Advertisement

பிள்ளையார்பட்டியில் தமிழ் புத்தாண்டு வழிபாடு: கட்டுபாடு விதிகளின்படி பக்தர்கள் அனுமதி

திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடைபெறும் தீர்த்தவாரியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டரர்கள். சுவாமி தரிசனம் செய்ய மட்டும் கெரரோனா கட்டுபாடு விதிகளின்படி பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

புத்தாண்டு சிறப்பு வழிபாடாக கோயில் குளத்தில் காலையில் தீர்த்தவாரி நடைபெறும். மாலை புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிக்கப்படும். அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் மற்றும் அர்ச்சனை செய்வர். தற்போது, கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற பத்தர்களுக்கு அறங்காவலர்கள் காரைக்குடி பி.எஸ்.ஆர்.எம்.ஏ.ராமசாமி மற்றும் வலையப்பட்டி எம். நாகப்பன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாதவர்கள், கட்டுப்பாடு பகுதியிலிருந்து வருவர்களுக்கு கோயிலுக்குள் அனுமதியில்லை. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்டவர்கள், தவிர்க்க வேண்டும். காய்ச்சல் சோதனை, கிருமிநாசினி தெளித்த பின்னே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அர்ச்சனை பொருட்கள் தவிர்க்க வேண்டும். 5 பேருக்கு மேல் கூடாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கோயில் வழக்கப்படி ஆகம விதிகளின்படி பூஜை, கைங்கர்யங்கள் நடைபெறும். அதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை.சுவாமி தரிசனம் மட்டுமே அனுமதி. இவ்வாறு தெரிவித்தனர்.

புத்தாண்டன்று அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்து காலை 5.30 மணிக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் துவங்கும். மூலவர் தங்கக்கவசத்திலும், உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்திலும் அருள்பாலிப்பர். வழக்கமாக காலையில் குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரி, மாலையில் பஞ்சாங்கம் வாசித்தல், இரவில் உ ற்சவர் பிரகாரம் வலம் வருதலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.

Advertisement
 
Advertisement