Advertisement

காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி

சித்தூர்: மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 24 .3 .2020 1 முதல் நேற்று 9.6 .2021 வரை கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் உண்டியலில் செலுத்திய பணத்தை எண்ணும் பணி இன்று காலை கோயில் அதிகாரிகள் முன்னிலையில் ஊழியர்கள் எண்ணப்பட்டனர். இதில் .. பணமாக 67,46,623, தங்கம் 0.052 கிராம், வெள்ளி 469.750கிலோ, வெளிநாட்டு 20 டாலர்கள் என்று சிவன் கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரியப்படுத்தினார்.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு கடந்த இரண்டு மாதங்களாக நாடெங்கிலும் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் மற்ற மாநிலங்கள் உட்பட ஆந்திர மாநிலத்திலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பக்தர்கள் கோயிலுக்கு வருவது கணிசமாக குறைந்துள்ளது .இதனால் கோயிலில் உண்டியல் வருமானமும் பெருமளவில் குறைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர் . வழக்கமாக மாதம் ஒன்றுக்கு சுமார் ஒரு கோடிக்கும் மேல் உண்டியல் வருமானம் (பணம்) இருந்து வரும் என்றும் ஆனால் தற்போது கணிசமாக குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
 
Advertisement