Advertisement

ஹிந்து கோவில்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை மற்ற மத வழிபாட்டு தலங்களுக்கு ஒதுக்கக் கூடாது

பெங்களூரு-ஹிந்து கோவில்களுக்கு வழங்கப்படும் நிதியை பிற மத வழிபாட்டு தலங்களுக்கு ஒதுக்கக்கூடாது, என, அமைச்சர் கோட்டா சீனிவாஸ் பூஜாரி தெரிவித்துள்ளார். கோட்டா சீனிவாஸ் பூஜாரி வெளியிட்டுள்ள அறிக்கை:ஹிந்து கோவில்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மானியத்தொகையை மற்ற மத வழிபாட்டு தலங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொள்ள முந்தைய அரசு ஒப்புதல் அளித்திருந்தது.தற்போது ஹிந்து கோவில்களுக்கு மட்டுமே அந்நிதியை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.மற்ற மத வழிபாட்டு தலங்களின் வளர்ச்சிக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.அந்தந்த மத தலங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்வது சம்பந்தப்பட்ட துறைகளின் பொறுப்பாகும்.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.ஹிந்து மதத்தை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:மாநிலத்தில் 27ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹிந்து கோவில்களுக்கு ஆண்டு மானியமாக 133 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.இதில் 764 பிற மத வழிபாட்டுத் தலங்களும் நிதி பெறுகின்றன. அைச்சரின் உத்தரவை தொடர்ந்து ஹிந்து கோவில்களுக்கான நிதியை மற்ற மத வழிபாட்டு தலங்களுக்கு வழங்குவது நிறுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Advertisement