Advertisement

ஜம்முவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலுக்கு அடிக்கல்

திருப்பதி: திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோவில் மிகவும் புகழ் பெற்றது.இந்த கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் நாள்தோறும் வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் உள்ள பிரபலங்கள் மற்றும் அரசாங்கத்தின் சார்பில் நிலம் வழங்கப்பட்டு அங்கும் வெங்கடேஸ்வரா கோவில் கட்டிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் கன்னியாகுமரி கடலோரத்தில் உள்ள கோவிலும் ஒரு சான்றாகும்.இதன் மூலம் அந்தப்பகுதியில் உள்ளவர்கள் நாள்தோறும் பெருமாளை தரிசிக்க வாய்பபு கிடைக்கிறது.

ஜம்மு (காஷ்மீர) மாநிலத்தின் சார்பில் கோவில் கட்ட வழங்கப்பட்ட இடத்தில் வெங்கடேஸ்வரா கோவில் கட்ட அடிக்கல் நாட்டு விழா கடந்த 13 ந்தேதி ஞாயிறன்று நடைபெற்றது.இந்த விழாவில் மாநில லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்கா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். மஜ்கின் என்ற இடத்தில் இந்த கோவில் விரைவில் எழுப்பப்படும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Advertisement
 
Advertisement