Advertisement

இன்று காஞ்சி ஜெயந்திரர் பிறந்த நாள்

காஞ்சிபுரம் 69வது மடாதிபதியாக இருந்தவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். 82 வயதான இவரது இயர் பெயர் சுப்பிரமணிய மகாதேவ ஐயர். 1935ம் ஆண்டு ஜூலையில் பிறந்தார். இவருடைய 19வது வயதில் அதாவது, முன்னாள் பீடாதிபதியான ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி இளைய பீடாதிபதியாக மார்ச் 22, 1954-ம் ஆண்டில் அறிமுகம் செய்து வைத்தார். இவரின் புரோகிதத்தன்மையாலும் ஆழ்ந்த புலமையாலும் இந்து சமயத்தினரிடையே செல்வக்குடையவராகத் திகழ்ந்தார். காஞ்சி மடத்தின் அதிகாரம் பெற்றத் தலைவராக விளங்கினார். இம்மடத்தில் பல வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் காஞ்சி மடத்தின் பக்தர்களாக உள்ளனர். இம்மடம் பல பள்ளிகளையும், மருத்துவமனைகளையும், சென்னையில் இயங்கும் சங்கர நேத்ராலயா மற்றும் கவுகாத்தி, அசாம், மற்றும் இந்து மிசன் மருத்துவமனை, குழந்தைகள் மருத்துவமனை போன்றவைகளை இயக்குகின்றன. 28 பிப்ரவரி 2018 அன்று ஜெயேந்திர சரஸ்வதி முக்தியடைந்தார். தற்போது விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி சங்கர மடத்தின் 70வது பீடாதிபதியாக உள்ளார்.

Advertisement
 
Advertisement