Advertisement

கோவையில் ஆயிரம் கோடி ராம நாமம் பிரதிஷ்டை

வடவள்ளி: கோவையில், முதன்முறையாக ஆயிரம்கோடி ராம நாமம் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

ஸ்ரீ ராம நாம வங்கியின், 64வது, நாம யாத்திரை சென்னையிலிருந்து, 1,000 கோடி நாமம் புறப்பட்டு கோவை வந்தடைந்தது. மருதமலை அடிவாரம், ஐ.ஓ.பி., காலனியில் புதியதாக கட்டப்பட்டுள்ள, ஆதித்ய ராம நாம கேந்திரத்தில், 1,000 கோடி ராம நாமம் நிரந்தர பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதனையொட்டி காலை, 10:00 மணி முதல் துவங்கிய, ஆயிரம் கோடி நாம ஆராதனை, வரும், 1ம் தேதி வரை நடக்கிறது. அதனை தொடர்ந்து, 31ம் தேதி இரவு முதல், ஆகஸ்ட், 1ம் தேதி, விடியற்காலை வரை, தேர்ந்தெடுக்கப்பட்ட கைங்கர்ய பரர்களால், ஆயிரம் கோடி ராம நாமம், சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த, பிரதிஷ்டை நேரத்தில், கொரோனா தொற்று காரணமாக, பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பிரதிஷ்டைக்கு பின், 1ம் தேதி, காலை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வரும், 1ம் தேதி, காலை, 10:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை, புஷ்பாராதனை, த்வஜ வலம், பாதுகா வலம், நாம தேர் இழுத்தல், நாம வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

Advertisement
 
Advertisement