Advertisement

திருமுருகன்பூண்டியில் தயாரான 42 அடி உயர ஆஞ்சநேயர் சிலை

திருப்பூர்: திருமுருகன்பூண்டியில் உருவாக்கப்பட்ட 42 அடி உயர ஆஞ்சநேயர் சிலை, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் உருவாக்கப்படும் கற்சிலைகள், தமிழகம், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி, அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உட்பட பல வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இங்குள்ள ஒரு சிற்ப ஆலையில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சிலை, திருச்சி அருகே கொள்ளிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சிலையை வடிவமைத்த சிற்பி முத்துகுமரன் கூறுகையில், ஊத்துக்குளியில் இருந்து 250 டன் கல் எடுத்து வந்து, இரண்டு ஆண்டுகளாக 12 சிற்ப தொழிலாளர்கள் உழைப்பில், 42 அடி உயர ஆஞ்சநேயர் சிலையை உருவாக்கினோம்.சிலையின் மொத்த எடை 110 டன். இங்கிருந்து லாரியில் கொள்ளிடம் அனுப்பி வைக்கப்பட்டது. விஸ்வரூப ஆஞ்சநேயராக காட்சியளிக்கும் இந்த சிலை, ஸ்ரீரங்கம் - கொள்ளிடம் அருகே தனியார் தோட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது, என்றார்.

Advertisement
 
Advertisement