Advertisement

பழநி மலைக்கோயிலில் உண்டியல் எண்ணிக்கை

பழநி: பழநி மலைக்கோயிலில் நேற்று (செப்.16) உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 945 கிராம் தங்கமும், 33 ஆயிரத்து 367 வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ 1 கோடியே 64 லட்சத்து 3 ஆயிரத்து 130 மற்றும் 84 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார், நந்தகுமார் உட்பட அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement
 
Advertisement