Advertisement

ஸ்ரீரங்கத்தில் தாயார் திருவடி சேவை : வருடத்தில் ஒரு நாள் மட்டும் கிடைக்கும் தரிசனம்!

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவத்தில் வருடத்தில் ஒரு நாள் மட்டும் நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெற்றது.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் கடந்த 6-ம் தேதி தொடங்கி வருகிற 14-ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி உற்சவர் ஸ்ரீரங்கநாச்சியார் தினமும் மாலை புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். உற்சவத்தின் 5-ம் நாள் உற்சவர் ரெங்கநாயகி தாயார் இரத்தின கிரீடம், வைரத்தோடு, வைர அபயஹஸ்தம், பவள மாலை, அடுக்கு பதக்கம், முத்துச்சரம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து சிறப்பபு அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் எழுந்தருளினார்.

ரெங்கநாச்சியார் படி தாண்டா பத்தினி என்ற சிறப்பு கொண்டவர். சாதாரண நாட்களில் இவரது பாதங்கள் தெரியாத வகையிலேயே அலங்காரம் செய்யப்படும். ஆனால் நவராத்திரி உற்சவத்தின் 7-ம் திருநாள் மட்டும் தாயாரின் பாதங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்படும். இதனால் வருடத்தில் ஒருநாள் மட்டுமே தாயாரின் திருவடியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். இந்த ப்லவ வருடத்திற்கான ஸ்ரீ ரங்கநாச்சியார் திருவடி சேவை தாயார் சன்னதியில் உள்ள கொலு மண்டபத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) மாலை நடைபெற்றது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Advertisement