Advertisement

பாலிதீன் இல்லாமல் சபரிமலை வருவோருக்கு கேரள போலீஸ் பாராட்டு

சபரிமலை : பாலிதீன் இல்லாமல் சபரிமலை வரும் பக்தர்களுக்கு கேரள போலீஸ் சார்பில் பாராட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலையில் பக்தர்கள் கொண்டு வரும் பாலிதீன் பொருட்களால் காட்டு விலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட்டதோடு, சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டது.இதனால் பக்தர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த 2011-ம் ஆண்டு புண்ணியம் பூங்காவனம் திட்டம் கேரள போலீஸ் மேற்பார்வையில் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தினமும் காலையில் நடை பெறும் துப்புரவு பணியில் போலீசுடன் அனைத்து அரசு துறையினரும், ஐயப்ப சேவா சங்க தொண்டர்கள், பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்கள் பக்தர்களிடம் பாலிதீன் பைகள் கொண்டு வரக்கூடாது என பிரசாரம் செய்கின்றனர். பாலிதீன் கொண்டுவராத பக்தர்களை புண்ணியம் பூங்காவனம் அலுவலகத்தில் அழைத்து சென்று பாராட்டுகின்றனர். இது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஜனை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் சன்னிதானம் பெரிய நடைப்பந்தலில் தொடங்கியுள்ளன. பக்தர்கள் அதிகரித்து வருவதால் சன்னிதானத்தில் அரவணை கவுன்டர் எண்ணிக்கை ஆறில் இருந்து எட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement
 
Advertisement