Advertisement

விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம்

விருதுநகர்: விருதுநகரில் உள்ள மீனாட்சியம்மன் உடனுறை சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம், 20 ஆண்டுகளுக்கு பின் நேற்று நடந்தது. ஜூன் 29ல் 52 குண்டங்களுடன் துவங்கிய கும்பாபிஷேக நிகழ்ச்சி தொடர்ந்து, கோபூஜை, மகாலட்சுமி ஹோமம் என ஆறு கால யாக பூஜைகளும் நடந்தன. நேற்று காலை 8.50 க்கு கோபுர ம், மூலஸ்தான கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் பிள்ளையார்பட்டி பிச்சைகுருக்கள் தலைமையில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 5 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 8 மணிக்கு தீபாரதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக்குழுவினர் தலைவர் எஸ்.வி.எம்.ரத்தினக்குமார், உபதலைவர்கள் எஸ்.வி.நாகராஜன், எஸ்.சுப்பிரமணியன், செயலாளர் சந்திரசேகரன், உதவி செயலாளர் ராஜகுருவன், பொருளாளர் ரமேஷ்குமார், மேனேஜிங் டிரஸ்டி ரமேஷ்குமார், தக்கார் முத்துராமலிங்கம், செயல் அலுவலர் சி.குருஜோதி செய்திருந்தனர்.

Advertisement
 
Advertisement