Advertisement

திருமலையில் நாளை ஆழ்வார் திருமஞ்சனம்!

நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், வரும், 10ம் தேதி செவ்வாயன்று, கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. வரும், 16ம் தேதியன்று, ஆடி மாதம் ஒன்றாம் தேதி துவங்குகிறது. ஆடி முதல் மார்கழி வரையில், ஆறு மாத காலத்தை, தட்சிணாயன புண்ணிய காலம் என, வேதங்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அன்று, திருமலை கோவிலில், மூலவரான வெங்கடேச பெருமாளுக்கு, ஆனி வார ஆஸ்தான வைபவம் நடத்தப்படும்.திருமஞ்சன நிகழ்ச்சிக்குக்கு முன், மூலவரான வெங்கடேச பெருமாளை, வஸ்திரங்களால் முழுமையாக மறைத்து விடுவது வழக்கம். கோவிலை சுத்தப்படுத்திய பின், நாமம், ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சையிலை, கட்டியான கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிளி போன்ற வாசனை திரவியங்கள் கலந்த புனித நீர், கோவில் முழுவதும் தெளிக்கப்படும்.பின், மூடப்பட்ட வஸ்திரம் விலக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்படும். தொடர்ந்து, பக்தர்கள் அன்று பகல், 12 மணி முதல், மூலவரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

Advertisement
 
Advertisement