Advertisement

காணும் பொங்கலில் ஊரடங்கால் வெறிச்சோடிய கடற்கரை சுற்றுலாத்தலங்கள்.

மயிலாடுதுறை: காணும் பொங்கல் ஆன நேற்று ஊரடங்கு காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கடற்கரை சுற்றுலா தளங்கள் பொதுமக்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் கடற்கரைகளில் கூடி மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். இவ்வாண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தி வருகிறது. காணும் பொங்கலான நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்கள் பொதுமக்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள டேனிஷ் கோட்டை மூடப்பட்டு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வருகை இன்றி ஆல் அரவமற்று வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லாதவாறு டேனிஷ் கோட்டைக்கு செல்லும் நுழைவாயில் பகுதியில் பொறையாறு போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் தரங்கம்பாடி சுற்றுலா தளம் முழுமையாக வெறிச்சோடி காணப்பட்டது. இதுபோல சிலப்பதிகார நகரமான பூம்புகார் கடற்கரை சுற்றுலா தளமும் பொதுமக்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement
 
Advertisement