Advertisement

திருக்கோஷ்டியூர் ராப்பத்து உற்ஸவம் 22ம் தேதி நிறைவு

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்று ராப்பத்து உற்ஸவம் 22ம் தேதி நிறைவடைகிறது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 21 நாட்கள் அத்யயன உற்ஸவம் நடைபெறும். ஜன.3 ல் பகல் பத்து உற்ஸவம் துவங்கியது. ஜன.13ல் பெருமாள் தேவியருடன் பரமபத வாசல் எழுந்தருளினார். மறுநாள் ராப்பத்து உற்ஸவம் துவங்கி தினசரி மாலையில் பெருமாள் சொர்க்கவாசலில் பெருமாள் எழுந்தருளல் நடைபெறுகிறது. நேற்று வேடு பரி உற்ஸவம் நடந்தது. 22ம் தேதி காலை 10.00 மணிக்கு சுவாமி பரமபதவாசல் எழுந்தருளல், ஏகாதசி மண்டபத்தில் பத்தி உலாத்துதல் நடைபெறும். மாலையில் நம்மாழ்வார். திருவடி தொழுதல், தேவஸ்தான மாலை, பரிவட்ட மரியாதைகள் நடந்து கோஷ்டி பிரபந்தத்துடன் நிறைவடையும்.

Advertisement
 
Advertisement