Advertisement

திருப்பரங்குன்றம் தெப்பத் திருவிழா: பிப்.1ல் துவங்குகிறது

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா பிப். 1ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக உள் திரு விழாவாக நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

வழக்கமாக திருவிழாக்காலங்களில் காலை, மாலையில் தினமும் ஒரு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். தெப்பத்திருவிழா அன்று ஜி.எஸ்.டி., ரோட்டிலுள்ள தெப்பகுள தண்ணீரில் மிதவை தெப்பம் அமைக்கப்பட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை எழுந்தருள்வர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க காலையில் மூன்று சுற்றுகளும், இரவும் மூன்று சுற்றுகள் சுற்றி தெப்பத்திருவிழா நடைபெறும். கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி திருவிழாக்கள் நடைபெறும் 10 நாட்களும் கோயில் திருவாட்சி மண்டபத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். பக்தர்கள் கோவிலுக்குள் சுவாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படுவர். தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement
 
Advertisement