Advertisement

காளஹஸ்தி கங்கையம்மன் கோயில் திருவிழா : பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள அக்ரஹாரம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இன்று புதன்கிழமை இரண்டு நாட்கள் கங்கை அம்மன் திருவிழா அப்பகுதியில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

முன்னதாக கங்கையம்மன் கோயிலை சிறப்பு மலர்களாலும் மின் விளக்குகளாலும் கோயில் சார்பில் அலங்காரம் செய்யப்பட்டது. திருவிழாவையொட்டி பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடன்களை செலுத்தி வந்தனர் . பொங்கல் வைத்தும், கூழ் ஊற்றுதல், சேவல் மற்றும் ஆடு பலி கொடுத்தல் போன்றவை செய்தனர் . புதன்கிழமை இன்று முதல் முறையாக ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில் அக்ரஹாரம் கங்கையம்மனுக்கு சிவன் கோயில் சார்பில் சீர்வரிசை பொருட்கள்( பாரே) ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு மற்றும் உறுப்பினர்கள் கோயில் அதிகாரிகள் போன்றோர் சீர்வரிசைப் பொருட்களை கோயில் அலங்கார மண்டபத்தில் இருந்து தலைமீது சுமந்து மேளதாளங்கள் மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக அக்ரஹாரம் கங்கையம்மன் கோயில் வரை கொண்டு சென்று.அங்கு கோயில் பூசாரி வெங்கட்ரமணா விடம் வழங்கிய பின்னர் சாமி தரிசனம் செய்தனர். இதே போல் காலை முதல் மாலை வரை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் .கோயில் சார்பில் அன்னதானம் மற்றும் தண்ணீர் பந்தல் அமைத்தல் சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு பிரசாதங்களையும் வழங்கினர்.

Advertisement
 
Advertisement