Advertisement

அவிநாசி லிங்கேஸ்வரர் சன்னதி கோபுரத்தில் செடி : சிலைகள் சேதமடையும் அபாயம்

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், உள்பிரகாரத்தில் மூலவர் சன்னதி மேல் அமைந்துள்ள கோபுரத்தில், சிலைகளுக்கு நடுவே அரச மரசெடி முளைத்துள்ளதால், கோபுரம் மற்றும் சிலைகள் சேதமடையும் அபாயம் உள்ளது.

கொங்கேழு சிவாலயங்களுள் முதன்மையானது. காசியில் வாசி அவிநாசி என்ற போற்றுதலுக்குரியதும், பழமை வாய்ந்ததுமான அருள்மிகு கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேசுவரர் கோவிலில் கடந்த 2008ம் ஆண்டு பூர்ண கும்பாபிசேகம் நடைபெற்றது ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிசேகம் நடைபெற வேண்டும் என்பது சிவ ஆகம விதிகளில் ஒன்றாகும்.தற்போது 14 ஆண்டுகள் கடந்த நிலையில், கோவிலில் முன் பகுதியில் உள்ள ராஜகோபுரம்,உள் கற்பக கிரஹ பிரகாரத்தில் அமைந்துள்ள கோபுரங்களில் உள்ள சிலைகள்,அனைவற்றிலும் பெயிண்டுகள் மங்கி பொலிவிழந்தும், சிலவற்றில் சிலைகள் சேதமடைந்தும் உள்ளது. மேலும், மூலவர் லிங்கேஸ்வரர் சன்னதி மேல் பகுதியில் அமைந்துள்ள கோபுரத்தில்,சிலைகளுக்கு நடுவே அரச மரசெடி துளிர்வு விட்டுள்ளதால்,செடி பெரியதாகி சிலைகளை மேலும் சேதப்படுத்தும் என்றும், கோபுரத்தின் இஸ்திர தன்மை பாதிப்படையும் என்பதால் உடனடியாக மரமாத்து பணிகளை மேற்கொண்டு விரைந்து கும்பாபிசேகம் நடத்திட பக்தர்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.

Advertisement
 
Advertisement