Advertisement

காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்

சேந்தமங்கலம்: பூச்சானங்குட்டையில் உள்ள பிரசித்த பெற்ற காளியம்மன் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சேந்தமங்கலம் அடுத்த வாழவந்திகோம்பை பஞ்.,சில் உள்ள பூச்சனாங்குட்டையில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. கோவிலின் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்து, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் காவிரியிலிருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு, விநாயகர் பூஜை, புண்யாக வாசனை, கலச ஆவாஹனம் முதல் கால யாக பூஜை, காயத்ரி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூரணஹுதி நடந்தது. பின் தீபாராதனையும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து நேற்று வேத பாராயணத்துடன் மகாகணபதி, நவகிரக, குபேர மகாலட்சுமி, சுதர்சன மூலமந்திர ஹோமங்களுடன், மகா கணபதி அபிஷேகமும் காளியம்மன் சுவாமிக்கு மஹாகும்பாபிஷேகம் நடந்தது. பின் மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு ஆராதனைகள் நடந்தது. பின் பக்தர்களுக்கு தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டு, மகா தீபாராதனையும், பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. காளியம்மன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கும்பாபிஷேக விழாவிற்கு சேந்தமங்கலம், காந்திபுரம், ஆர்.பி.புதுார், வெண்டாங்கி, காரவள்ளி, அம்மன்பள்ளம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த, ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Advertisement